உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
28 செவ்வாய்

கவிஞர் றோஷன் அக்தரின் ‘யாருமற்ற மதியம்’ கவிதை நூல் வெளியீடு.!

இலங்கை செய்திகள் 14 மணி நேரம் முன்
57 பார்வைகள்

முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியும் கவிஞருமான றோஷன் அக்தர் எழுதிய ‘யாருமற்ற மதியம்’ எனும் கவிதை நூலின் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (26) மாலை கல்முனை ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார்.

கல்முனை அனுசரி இலக்கிய வட்டத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர், கட்சியின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ.காதர் உட்பட பல அரசியல்வாதிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பிரபல எழுத்தாளர் உமா வரதராஜன், அப்துல் றஸாக், மன்சூர் ஏ. காதிர், எம்.எஸ்.எம். ஜமீல், நபீல் மற்றும் கதீர் ஆகியோர் நூல் பற்றிய ஆய்வுகளையும் மதிப்பீட்டு உரைகளையும் வழங்கினர்.

இக்கவிதை நூல் இலக்கியச் செழுமை, சிந்தனைத் தெளிவு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் சிறந்த படைப்பாக அமைந்துள்ளதாக உரையாற்றியோரும் கலந்துகொண்டோரும் கருத்துத் தெரிவித்தனர். அத்துடன் நூலாசிரியர் றோஷன் அக்தரின் இலக்கியப் பணி தொடர்ந்து சிறக்கத் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையின் அதிபரை உடனடியாக மாற்றத் தீர்மானம்!

மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை (27) மாலை மன்னார் மாவட்ட…

22 0 0
இலங்கை செய்திகள்

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணிப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன்பு நேற்று  (26) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு ஜூலை…

52 0 0
இலங்கை செய்திகள்

“நேர்மை கலாசாரம் – தூய இலங்கை – 2026” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்படும் “Clean Sri Lanka (தூய இலங்கை)” தேசிய செயற்றிட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு,…

64 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் நாள் அமர்வு இன்று இடம்பெற்றது!

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் அமர்வு சிறுவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.…

45 0 0