கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!
கொலன்னாவை வீதியில் கொத்தட்டுவ பகுதியை அண்மித்த பகுதியில் இன்று (27) திங்கட்கிழமை முச்சக்கரவண்டி ஒன்று எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், முச்சக்கர வண்டியின் பின்புற ஆசனத்தில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டி சாரதியின் அலட்சியத்தால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

