உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

தர்மபுரியில் தாய் மற்றும் 3 பிள்ளைகள் கிணற்றில் இருந்து சடலங்களாக மீட்பு!

இந்திய செய்திகள் 4 வாரங்கள் முன்
89 பார்வைகள்

தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இருந்த கிணற்றில் இருந்து ஒரு தாய் மற்றும் அவரது 3 பிள்ளைகள் என நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் தர்மபுரி தடங்கம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி அம்சா (35). இத்தம்பதிக்கு ஜீவிதா (16), நவீனா (6) என்ற இரு மகள்களும், குமரன் (3) என்ற ஒரு மகனும் இருந்தனர். 11 ஆம் ஆண்டில் கல்வி கற்றுவந்த மூத்த மகள் ஜீவிதா உட்படக் குடும்பத்துடன் இவர்கள் வசித்து வந்த நிலையில், கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 19ஆம் திகதி மீண்டும் ஏற்பட்ட தகராறையடுத்து, அம்சா தனது 3 பிள்ளைகளுடன்வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் அருகிலுள்ள கிணற்றில் சடலங்கள் மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதியமான்கோட்டை பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் கிணற்றிலிருந்து தாய் மற்றும் 3 பிள்ளைகளின் சடலங்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து அதியமான்கோட்டை பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

58 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு…

61 0 0