உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
66 பார்வைகள்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 72,430 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நேற்று (15) மாத்திரம் 1,195 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 17,051 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 38,160 ஆகும்.

அத்துடன், தென் மாகாணத்தில் 11,274 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 6,073 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 6,026 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில் கம்பஹா மாவட்டத்தில் 15,082 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 14,447 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 5,124 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டெங்கு தொற்று காரணமாக இதுவரையான காலப்பகுதியில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை தீவிரம்.!

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஒன்றிணைந்த தேசிய போதைப்பொருள் ஒழிப்பு’ நடவடிக்கையின் கீழ், கடந்த எட்டு மாத காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் 2 இலட்சத்து…

44 0 0
இலங்கை செய்திகள்

கைதிகள் பல மடங்கு அதிகம்; அதிகாரிகள் மிகவும் குறைவு.!

இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் மிக உயரிய பதவிகளில் பெரும்பாலானவை தற்காலிக அதிகாரிகளால் வகிக்கப்படுவதாலும், கொள்ளளவை மீறிய வகையில் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாலும், ஒட்டுமொத்த சிறை நிர்வாகமும் பாதுகாப்பும்…

60 0 0
இலங்கை செய்திகள்

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய செயலாளர் கடமைகளை பொறுப்பேற்பு.!

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) அவர்களின் உத்தரவிற்கமைவாக, நிந்தவூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (தரம் I) ஏ.ஜி.…

54 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட மலர்ச் செடிகள்; பெண் ஒருவர் கைது.!

தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து பயணப் பொதிகளுக்குள் மறைத்து சட்டவிரோதமாக நாட்டுக்குக் கடத்திவரப்பட்ட பெருமளவிலான மலர்ச் செடிகளுடன் இலங்கைப் பெண் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்…

72 0 0