உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன் இளைஞன் கைது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
121 பார்வைகள்

தொம்பே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரன்கொட பிரதேசத்தில், பெருந்தொகையான ஐஸ் போதைப்பொருள், கண்ணிவெடிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

மண்டாவல பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கோனஹேன முகாம் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, 09 கிலோகிராம் 128 கிராம் ஐஸ் போதைப்பொருள், மனிதர்களுக்கு எதிரான 03 கைக்குண்டுகள் மற்றும் அவற்றின் 03 பியூஸ் பாகங்கள், M16 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 20 செயற்பாட்டுத் தோட்டாக்கள், 05 வாள்கள், மின்னணு தராசு ஒன்று மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் இது தொடர்பான தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0