உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இது சட்டத்தின் ஆட்சி; ஊழல், மோசடிகளை நியாயப்படுத்தாதீர்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
125 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்துள்ள அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படுவது அரசியல் பழிவாங்கல் அல்ல, மாறாக சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் பணிகளே என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
“கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம், சுயாதீன விசாரணை நிறுவனங்களின் ஊடாகவே சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் எவ்வித அரசியல் உள்நோக்கமோ அல்லது பழிவாங்கும் நோக்கோ கிடையாது.

அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திச் சட்டத்திலிருந்து தப்பிக்கும் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. குற்றங்கள் புரிந்தவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் பதில் கூற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

ஊழல், மோசடி தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுக்கள், கடந்த காலங்களைப் போலன்றி மிகவும் வெளிப்படையாகவும் சுயாதீனமாகவும் செயற்படுகின்றன. இதில் எந்தத் தரப்புக்கும் சார்பாகச் செயற்படும் தேவை அரசுக்கு இல்லை.

தங்கள் மீதான சட்ட நடவடிக்கைகளைத் தற்காத்துக் கொள்ள எதிர்க்கட்சிகள் அரசின் மீது ‘அரசியல் பழிவாங்கல்’ என்ற முத்திரையை குத்த முயற்சிக்கின்றன. பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் ஊழல்களை நியாயப்படுத்த எவருக்கும் உரிமையில்லை. அரசு மக்களின் பணத்தைப் பாதுகாப்பதிலும், ஜனநாயக விழுமியங்களைக் காப்பதிலும் உறுதியாக உள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மணியின் 4 ஆவது இடைக்கால அறிக்கை உண்மைகளை மூடி மறைக்கும் சதிச் செயல்!!

செம்மணி விவகாரம் தொடர்பாக முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் கூறப்பட்ட ஆய்வுகளை, 4ஆவது இடைக்கால அறிக்கை தலைகீழாக மாற்றி எழுதியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதுவரை கண்டெடுக்கப்பட்ட எச்சங்களில்…

80 0 0
இலங்கை செய்திகள்

ராஜ் சோமதேவா இலங்கை அரசின் கைக்கூலி –  காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி விசனம்!

செம்மணி மனித புதைகுழியின் தொல்லியல் ஆய்வாளர் ராஜ் சோமதேவா தமிழின படுகொலைகளை மூடி மறைக்கும் இலங்கை அரசின் கைக்கூலியாக செயல்பட்டமை அவரது இடைக்கால அறிக்கை எடுத்துக்காட்டுகிறது என…

69 0 0
இலங்கை செய்திகள்

கிரிஷ் நிதி மோசடி வழக்கு:நாமல் எம்.பிக்குமறியல் நீடிப்பு!

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான நிதி மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும்…

60 0 0
இலங்கை செய்திகள்

கட்டுக்கரை குளத்தின் கீழ் பெரும்போக நெற்செய்கை; முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பித்து வைப்பு.!

மன்னார் மாவட்டம் கட்டுக்கரை குளத்தின் கீழ் 2026/2027 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச்செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் விவசாயக் குழு கூட்ட தீர்மானங்கள் படி இன்றைய தினம்…

89 0 0