உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பலாலியில் 3ஆவது வாரமாகவும் போராட்டம் முன்னெடுப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
49 பார்வைகள்

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள தங்களது பூர்வீகத் தனியார் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை வீதியில் இறங்கிப் பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

பலாலிச் சந்தியில் இன்று காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட முதியவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்கள், நீண்டகாலமாக இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தங்கள் நிலங்களை நிபந்தனையின்றி மீள வழங்குமாறு வலியுறுத்திக் கோஷங்களை எழுப்பினர்.

இன்றைய போராட்டத்தின் போது, கொளுத்தும் வெயிலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போராட்டப் பகுதியில் தற்காலிகக் கொட்டகை (பந்தல்) ஒன்றை அமைக்கப் பொதுமக்கள் முற்பட்டனர். எனினும், அங்கு குவிக்கப்பட்டிருந்த பலாலிப் பொலிஸார் பொதுமக்களைக் கொட்டகை அமைக்க விடாது தடுத்து, அதற்கு அப்பட்டமாகத் தடை விதித்தனர்.

இதன்போது பொலிஸார் கருத்துத் தெரிவிக்கையில், “வடக்கில் நீங்கள் கொட்டகை அமைத்துப் போராடினால், தெற்கிலும் மக்கள் கொட்டகை அமைத்துப் போராடத் தொடங்கிவிடுவார்கள். எனவே, இங்கு கொட்டகை அமைக்க எம்மால் அனுமதிக்க முடியாது” எனக் கூறியுள்ளனர். பொலிஸாரின் இந்த விசித்திரமான பதிலால் போராட்டக் களத்தில் சில நிமிடங்கள் பெரும் பரபரப்பும், மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் ஏற்பட்டது.

எனினும், பொலிஸாரின் தடையையும் மீறி, கடுமையான வெயிலுக்கு மத்தியிலும் மக்கள் ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக வீதியில் அமர்ந்து தங்களது நீதிக்கான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் போராட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனும் பங்கேற்றிருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

34 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

60 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

57 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

60 0 0