உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்; மூவர் படுகாயம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
50 பார்வைகள்

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு மிக அருகில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று நடத்திய துணிகர வாள்வெட்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி தெரியவருவதாவது,
நாவாந்துறைப் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு அருகில் வசிக்கும் குடும்பத்தினருக்கும், கிளிநொச்சி – நாச்சிக்குடா பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தனிப்பட்ட தகராறு நிலவி வந்துள்ளது.

இந்தப் பகைமையின் காரணமாக, இன்று அதிகாலை கிளிநொச்சியிலிருந்து ‘பட்டா’ ரக வாகனமொன்றில் ஆயுதங்களுடன் வந்த நாச்சிக்குடா பகுதியைச் சேர்ந்த வன்முறைக் கும்பலே, நாவாந்துறையில் உள்ள அந்த வீட்டுக்குள் அதிரடியாகப் புகுந்து இந்த வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. தாக்குதலை நடத்திய பின்னர் அந்தக் கும்பல் வந்த வாகனத்திலேயே தப்பிச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தலைமறைவாகியுள்ள நாச்சிக்குடா கும்பலைச் சேர்ந்த சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

34 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

60 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

57 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

60 0 0