உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

டெங்கு தீவிரம்; 39 பேர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
38 பார்வைகள்

இலங்கையில் இந்த ஆண்டில் டெங்குக் காய்ச்சலின் பரவல் கணிசமாக அதிகரித்து வருகின்றது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள புதிய புள்ளிவிவரங்கள் எச்சரித்துள்ளன. நேற்று நள்ளிரவு வரையிலான தரவுகளின்படி, நாடு முழுவதும் 58 ஆயிரத்து 810 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 39 மரணங்களும் பதிவாகியுள்ளன. தற்போது டெங்கு நோயாளர்களின் மரண வீதம் 0.07 சதவீதமாகக் காணப்படுகின்றது.

பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் மிக அதிகமாக 21 ஆயிரத்து 547 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அதற்கு முன்னர் மே மாதத்தில் 8 ஆயிரத்து 590 பேரும், ஜனவரியில் 7 ஆயிரத்து 866 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஜூலை மாதத்தின் முதல் மூன்று நாட்களிலேயே 3 ஆயிரத்து 422 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருப்பது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகின்றது.

மாகாண ரீதியில் அவதானிக்கும் போது, மேல் மாகாணம் 30 ஆயிரத்து 876 நோயாளர்களுடன் (52.50%) மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக தென் மாகாணத்தில் 9 ஆயிரத்து 316 பேரும் (15.84%), சப்ரகமுவ மாகாணத்தில் 5 ஆயிரத்து 129 பேரும் (8.72%) இனங்காணப்பட்டுள்ளனர்.

மாவட்ட மட்டத்தில் கொழும்பில் 12 ஆயிரத்து 17 பேரும் (கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 2 ஆயிரத்து 514 பேர் உட்பட), கம்பஹாவில் 11 ஆயிரத்து 740 பேரும், மாத்தறையில் 4 ஆயிரத்து 262 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள 142 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு பரவும் அதிவேக அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

டெங்கு பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும், நீர் தேங்கும் இடங்களை உடனடியாக அழித்து நுளம்புகள் பெருகுவதைக் கட்டுப்படுத்த முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் சுகாதாரத் துறையினர் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

29 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

39 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

59 0 0