உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

குடத்தனையில் கோலாகலமாக ஆரம்பமானது ‘செல்வா பிரீமியர் லீக்-03’ கிரிக்கெட் தொடர்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
52 பார்வைகள்

யாழ். குடத்தனை வடக்கு செல்வா விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படும் ‘செல்வா பிரீமியர் லீக் – 03’ (SPL-03) கிரிக்கெட் போட்டிகள் இன்று காலை 9.30 மணியளவில் மிகச் சிறப்பாக ஆரம்பமாகின.

செல்வா விளையாட்டுக்கழகத்தின் தலைவர் திரு. நிதேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப விழாவில், பாரம்பரிய முறைப்படி மங்கள விளக்கேற்றப்பட்டு போட்டிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

செல்வா விளையாட்டுக்கழகத்தின் தலைவர் திரு. நிதேசன், செயலாளர் திரு. தாசி, பொருளாளர் திரு. மதுசன் மற்றும் புலம்பெயர் உறவான திரு. கோகுலதாசன் ஆகியோர் இணைந்து மங்கள விளக்கினை ஏற்றி வைத்தனர்.

மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து, செல்வா விளையாட்டுக்கழகத்தின் உத்தியோகபூர்வக் கொடியினை கழகத்தின் தலைவர் திரு. நிதேசன் அவர்கள் பெருமிதத்துடன் ஏற்றி வைத்தார்.

தேசியக் கொடி மற்றும் கழகக் கொடியேற்றத்தைத் தொடர்ந்து, வீரர்களுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக ஆரம்பமாகின. இந்தத் தொடக்க விழாவில் பெருமளவிலான விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் புலம்பெயர் உறவுகள் எனப் பலரும் கலந்துகொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

இளம் வீரர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் நடாத்தப்படும் இத்தொடர், குடத்தனை பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

29 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

39 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

59 0 0