அம்பாறையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு!
அம்பாறையில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய வளத்தாப்பிட்டி மற்றும் இஸ்மாயில்புரம் ஆகிய இடங்களை இணைக்கும் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள ஆள் நடமாட்டம் குறைவான வளவு ஒன்றில் குறித்த நபர் சடலமாக கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த நபர் பழைய வளத்தாப்பிட்டி காளி கோவில் வீதியைச் சேர்ந்த 57 வயதுடைய மயில்வாகனம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். எனினும் இவரது மரணத்திற்கு காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்மாந்துறை பொலிஸார் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.