உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சிறைச்சாலைகளைக் காட்டி நாமலின் அரசியல் பயணத்தை ஒடுக்க முடியாது!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
44 பார்வைகள்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ என்பவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர். எனவே சிறைச்சாலைகளைக் காண்பித்து அவரது அரசியல் பயணத்தை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சூளுரைத்துள்ளது.

அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசுக்கு எதிரான அரசியல் அடக்குமுறைகளை முன்னெடுப்பதற்காகவே, தமக்கு விசுவாசமான அதிகாரிகள் இருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் உயர் பதவிகளுக்கு ஜனாதிபதி நியமித்துள்ளார். ஏனெனில், தற்போதைய ஆட்சியாளர்களுக்கு நாமல் ராஜபக்ஷதான் தங்களுக்குரிய பிரதான அரசியல் சவால் என்பது மிக நன்றாகவே தெரியும்.

இதன் காரணமாகவே, நாமல் ராஜபக்ஷவுக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் ஆதரவைத் தடுப்பதற்கு அரசு முற்படுவதுடன், திட்டமிட்ட வகையில் அரசியல் அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விடுகின்றது.

நாமல் ராஜபக்ஷ என்பவர், இந்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் என்பதை அரசு மறந்துவிடக் கூடாது. எனவே, சிறைச்சாலைகளைக் காண்பித்து அல்லது சிறையில் அடைப்போம் என அச்சுறுத்தி அவரை ஒருபோதும் அடிபணிய வைக்க முடியாது.

நாங்கள் நாட்டின் சுயாதீன நீதிமன்றக் கட்டமைப்பை முழுமையாக நம்புகின்றோம். ஆனால், நீதிமன்றத்துக்குத் தங்களுக்குச் சாதகமான போலித் தகவல்களை அறிக்கையிடும் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் மயப்படுத்தப்பட்ட பொலிஸார் மீது எங்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

29 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

39 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

59 0 0