உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

குருநாகலில் குடும்பஸ்தர் தடியால் அடித்துக் கொ*லை! – சகோதரன் கைது

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
36 பார்வைகள்

குருநாகல் மாவட்டம், வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்விட்ட பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக, 58 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் தடியால் அடித்துப் படுகொ*லை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபருக்கும் அவருடைய சொந்தச் சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் முற்றியதன் காரணமாகவே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

இதன்போது ஆத்திரமடைந்த சகோதரர், அருகில் இருந்த தடியொன்றால் பலமாகத் தாக்கியதில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொ*லைச் சம்பவம் தொடர்பில் வெல்லவ பொலிஸ் நிலையத்துக்குப் பெறப்பட்ட அவசரத் தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து உடனடியாக விசாரணைகளை நடத்திய பொலிஸார், இந்தக் கொ*லையுடன் தொடர்புடைய சந்தேகநபரான உயிரிழந்தவரின் சகோதரரைக் கைது செய்துள்ளனர்.

பலியானவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் குருநாகல் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்தக் கொ*லை குறித்து வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

39 0 0
இலங்கை செய்திகள்

மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பு.!

இலங்கையின் நாடக மற்றும் திரைப்படத் துறையில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்து வரும் மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களின் நீண்டகால கலைச் சேவையினைப் பாராட்டி, நடிகரும்…

42 0 0
இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

34 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

42 0 0