உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பெற்றோலை 131 ரூபாவாலும் டீசலை 101 ரூபாவாலும் உடனடியாகக் குறைக்க முடியும்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
47 பார்வைகள்

மக்களுக்கு உணரும் படியாக எரிபொருள் விலையைக் குறைப்பதாகப் பொய் வாக்குறுதி அளித்த திசைகாட்டி அரசாங்கம், ‘மலையைக் கிண்டி எலியைப் பிடித்த கதையாக’ மிகச் சொற்ப அளவிலேயே விலையைக் குறைத்துள்ளது என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
“2026 பெப்ரவரி 28 அன்று ஈரான் போர் தொடங்கும் போது, கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 72.87 டொலராகக் காணப்பட்டது. ஜூன் 29 அன்று இலங்கையில் எரிபொருள் விலை மாற்றப்பட்ட போது, அதன் விலை 72.55 டொலராகக் குறைவடைந்துள்ளது. உலக சந்தையில் விலை குறைந்துள்ளதால் அரசால் போருக்கு முந்தைய விலையிலோ அல்லது அதைவிடக் குறைவான விலையிலோ எரிபொருளை வழங்க முடியும்.

போருக்கு முன் 293 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்று தற்போது 20 ரூபா குறைக்கப்பட்டு 414 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது. இது இன்னும் 131 ரூபாவால் குறைக்கப்பட வேண்டும். அதேபோல், 281 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் 25 ரூபா குறைக்கப்பட்டு 382 ரூபாவுக்கு விற்கப்படுவதால், அது இன்னும் 101 ரூபாவினாலும் குறைக்கப்பட வேண்டும்.

இதேபோல் ஒக்டேன் 95 பெற்றோல் 155 ரூபாவினாலும், சுப்பர் டீசல் 149 ரூபாவினாலும் குறைக்கப்பட வேண்டும். அதிக விலைக்கு வாங்கிய எரிபொருள் இருப்பில் இருப்பதாக அரசு கூறும் காரணம் முற்றிலும் பொய்யானதாகும்.

கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியன்று மத்திய கிழக்கு போர் தொடங்கிய போது, தன்னிடம் 35 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பதாகக் கூறிய அரசு, போர் தொடங்கி 12 நாட்களுக்குள் விலையை ஏற்றியது. ஆனால், இப்போது உலக சந்தையில் விலை குறைந்து இரண்டு வாரங்கள் கடந்தும் அதன் பயனை மக்களுக்கு வழங்க மறுக்கின்றது. உலகிலேயே அதிக விலைக்கு எரிபொருளை வாங்கியதன் மூலம் பெறப்பட்ட இடைத்தரகுப் பண ஊழலை மறைப்பதற்கே அரசு இவ்வாறு செய்கின்றது.

அத்துடன், இலங்கையின் பொருளாதார தற்சார்புக்கு மிக முக்கியமானதாகக் கருதப்பட்ட எமது நாட்டு எண்ணெய் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தற்போதைய அரசால் நிறுத்தப்பட்டது ஏன்?” – என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

39 0 0
இலங்கை செய்திகள்

மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பு.!

இலங்கையின் நாடக மற்றும் திரைப்படத் துறையில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்து வரும் மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களின் நீண்டகால கலைச் சேவையினைப் பாராட்டி, நடிகரும்…

42 0 0
இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

34 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

42 0 0