உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான போதைப்பொருள் வியாபாரிக்கு விளக்கமறியல்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
33 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 40 வயதுடைய போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், நேற்றுமுன்தினம் திருக்கோவில், காயத்திரி கிராமத்தில் உள்ள சந்தேகநபரின் வீடு பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டது.

இதன்போது, அங்கு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 40 வயதுடைய நபர், 7 கிராம் 199 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

39 0 0
இலங்கை செய்திகள்

மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பு.!

இலங்கையின் நாடக மற்றும் திரைப்படத் துறையில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்து வரும் மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களின் நீண்டகால கலைச் சேவையினைப் பாராட்டி, நடிகரும்…

42 0 0
இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

34 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

42 0 0