உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வளர்ப்பு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
46 பார்வைகள்

குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மெணிக்ஹின்ன பகுதியில், “முது” என்ற வளர்ப்பு யானை தாக்கியதில் 61 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (30) இரவு 8.00 மணியளவில் மெணிக்ஹின்ன கணதேவி விகாரை பூமிக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

“முது” என்ற வளர்ப்பு யானையின் தாக்குதலில் ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு, நான்காவதாக யானையின் உரிமையாளரின் 61 வயதுடைய சித்தப்பா உயிரிழந்துள்ளார்.

யானை கட்டப்பட்டிருந்த இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த தானசாலையில் இருந்து பாண்களை எடுத்துவந்து, யானைக்கு உணவாக வழங்க முயன்ற போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யானை அந்த நபரைத் தாக்கிய போது, அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்க கடுமையாகப் போராடிய போதிலும் அது தோல்வியில் முடிவடைந்தது.

தாக்குதலுக்குப் பிறகு, சடலத்தை அந்த இடத்திலிருந்து மீட்பதற்குக் கூட சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்த நிலையில், அந்த யானை, தாக்குதல் நடத்திய இடத்திலேயே நீண்ட நேரம் நகராமல் நின்றிருந்ததாகப் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

56 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

37 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

67 0 0