உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

முன்னாள் ஆட்சியாளர்களின் குற்ற இராஜ்ஜிய சதி அம்பலம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
24 பார்வைகள்

குற்ற இராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதற்காகக் கடந்தகால ஆட்சியாளர்கள் செய்த சூழ்ச்சிகள் தற்போது அம்பலமாகத் தொடங்கியுள்ளன என்றும், இவை தொடர்பான அனைத்துச் சம்பவங்கள் குறித்தும் முறையான விசாரணைகள் நடத்தப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடமிருந்து முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ஒருவர் ஆகியோர் பலகோடி ரூபா இலஞ்சம் பெற்றுள்ளனர் என்று கூறப்படும் விவகாரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அமைச்சர் மேலும் கூறுகையில்,
“நாட்டில் ஒரு குற்ற இராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதற்காகவே முன்னாள் ஆட்சியாளர்கள் பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்துள்ளனர். ஆபத்தான போதைப்பொருள் குற்றவாளிகளைச் சட்டத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காக இவர்கள் பலகோடி ரூபா இலஞ்சம் வாங்கியுள்ளனர். இதுதான் அவர்கள் கடந்த காலத்தில் கட்டியெழுப்பிய சீரழிந்த அரசியல் கலாச்சாரமாகும்.

கடந்தகால ஆட்சியாளர்கள் செய்த இத்தகைய சூழ்ச்சிகள் இப்போது ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன. இவற்றை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மூடிமறைப்பதற்கு இந்த அரசு ஒருபோதும் இடமளிக்காது.

அம்பலமாகியுள்ள அனைத்துச் சம்பவங்கள் தொடர்பிலும் பாரபட்சமின்றி முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு, நாட்டில் சட்டத்தின் ஆட்சி மிகச் சரியாக நிலைநாட்டப்படும். இந்த அநீதிகளுக்கு எதிராகச் செயற்படுவதற்காகவே நாட்டு மக்கள் எமக்குத் தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

59 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

81 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

76 0 0