உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தமது வீதியை விடுவிக்கக் கோரி  கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு முன்னால் பொதுமக்கள் போராட்டம்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
26 பார்வைகள்

மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் தமது கிராமத்திற்குச் செல்லும் வீதியை கிழக்குப் பல்கலைக்கழகம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்களும் பொது அமைப்புகளும் இணைந்து கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

கடந்த 1990ஆம் ஆண்டு யுத்த காலப்பகுதியில், தமது கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதி மூடப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், கிழக்குப் பல்கலைக்கழகம் சுற்றுமதில் அமைத்ததால் தங்களது கிராமத்திற்கான வீதி முற்றிலும் தடைப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட மக்கள், தமக்கான வீதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்குத் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், விவசாய மற்றும் காணி அமைச்சின் இணைப்புச் செயலாளருமான ந. திலகநாதன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் என். நாகேந்திரன் ஆகியோர் வருகை தந்து, மக்களின் பிரச்சினை தொடர்பாகக் கலந்துரையாடினர்.
இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்களது நியாயமான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் அவர்களிடம் கையளித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

59 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

81 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

76 0 0