உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சுரேஷ் சலேவுக்கு திடீர் மாரடைப்பு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
25 பார்வைகள்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, திடீரென ஏற்பட்ட இதய பாதிப்பு காரணமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய சிகிச்சைப் பிரிவில் இன்று சனிக்கிழமை அவசரமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு மற்றும் கடுமையான நெஞ்சு வலி காரணமாக, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணி மற்றும் பல்வேறு உளவுத்துறை முறைகேடுகள் தொடர்பில் சுரேஷ் சலேவிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் அண்மைக்காலமாகத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

சட்டத்தின் பிரகாரமே அவர் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு நாடாளுமன்றத்தில் நேற்று அறிவித்திருந்த பின்னணியில், அவர் இன்று திடீர் இதய பாதிப்புக்குள்ளாகி இதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை அரசியல் மற்றும் பாதுகாப்புத் தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் தற்போது விசேட பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

61 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

64 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

84 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0