உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

9வது தர்மமுழக்கம் துடுப்பாட்டத்தொடர் சமநிலையில் நிறைவு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
34 பார்வைகள்

தர்மமுழக்கம் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய அணிகள் மோதும் 9வது தர்மமுழக்கம் துடுப்பாட்ட தொடர் தர்மபுரம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.

நேற்றைய முதல் நாள் முதல் இனிங்சில் முதலில் துடுப்பெடுத்தாடிய தர்மபுரம் மத்திய கல்லூரி அணி 139ஓட்டங்களை  பெற்ற நிலையில் அனைத்து இலக்குகளையும் இழந்தனர்.பதிலுக்கு முதலாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய முழங்காவில்  மகா வித்தியாலய அணியினர் 202ஓட்டங்கள் பெற்ற நிலையில் அனைத்து இலக்குகளையும் இழந்தனர்.

பதிலுக்கு இரண்டாவது இனிங்சை ஆரம்பித்த தர்மபுரம் மத்திய கல்லூரி 158ஓட்டங்கள் பெற்ற நிலையில் அனைத்து இலக்குகளையும் இழந்தனர்.95ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவது இனிங்சில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய முழங்காவில் மகா வித்தியாலய அணி 8
இலக்குகளை இழந்து  93ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டம் நிறைவுக்கு வர போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.போட்டியின்

ஆட்டநாயகனாக  தர்மபுரம் மத்திய  கல்லூரி வீரர்  R. தமிழ்வானன் ,
சிறந்த துடுப்பாட்ட வீரராக  தர்மபுரம் மத்திய கல்லூரி வீரர்  R.தமிழ்வானன்
சிறந்த பந்துவீச்சாளராக  முழங்காவில் மகா வித்தியாலய அணி வீரர்  V.சஞ்சயனும் ,தொடரின்  சகலதுறை வீரராக தர்மபுரம் மத்திய கல்லூரி வீரர்  R.தமிழ்வானனும்  ,சிறந்த களத்தடுப்பாளராக  முழங்காவில் மகா வித்தியாலய அணி வீரர்  எஸ்.அருட்செல்வனும் தெரிவு செய்யப்பட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

61 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

64 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

84 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0