உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும்  துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
33 பார்வைகள்

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு   ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்   மருதமுனை அல்மனார் தேசிய பாடசாலை முன்பாக  இன்று பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டி போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரம்பமானதுடன் பொதுமக்களும் பொலிஸாருடன் இணைந்து கொண்டனர்.

அரசாங்கத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் , அம்பாறை மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்  வகையில் மேற்படி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வானது அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல  அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி கல்முனை பிராந்திய பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்த நாராயண  நெறிப்படுத்தலில் இடம்பெறுவதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார்.

பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.கஜேந்திரனுடன் பொலிஸ் நிலைய  முக்கிய அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்ததுடன் பொதுமக்களுக்கு போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், அப்பகுதியில் உள்ள முச்சக்கர வண்டிகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டு இப்பிரச்சாரம் உத்தியோகபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

61 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

64 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

84 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0