இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் வைத்தியசாலையில் அனுமதி.!
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி இன்று சனிக்கிழமை (27) அதிகாலை பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று தியத்தலாவை ரயில் பாதைக்கு அருகில் சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த 42 பேர் உடனடியாக மீட்கப்பட்டு தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.