உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பனைநின்றான் கிராமத்திற்கான வீதி, பாலத்தின் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார் ரவிகரன் எம்.பி.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
30 பார்வைகள்

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பனைநின்றான் கிராமத்திற்குச் செல்லும் பாலமும் அதனோடிணைந்த ஒருபகுதி வீதி என்பவற்றின் சீரமைப்புப் பணிகள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு சீரமைப்பு பணிகள் ஆரம்பித்துள்ள குறித்த பாலத்தையும் அதனோடு இணைந்த வீதியையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நெடுங்கேணி – ஒட்டுசுட்டான் பிரதான வீதியிலிருந்து பனைநின்றான் கிராமத்திற்குச் செல்லும் பாலமும் அதனோடிணைந்த வீதியும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததால் அவ்வீதியைப் பயன்படுத்தும் மக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று கடந்த 2025.07.19ஆம் திகதியன்று குறித்த பகுதிக்கு நேரில் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலைமைகளைப் பார்வையிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து குறித்த வீதி மற்றும் பாலத்தினைச் சீரமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார்.

இத்தகைய சூழலில் தற்போது குறித்த பாலம் மற்றும் பாலத்தோடு இணைந்த ஒருபகுதி வீதியையும் சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள சீரமைப்புப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதன்பேது புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இ.கிரிதரன், சமூகசெயற்பாட்டாளர் கு.கஜீபன் ஆகியோரும் இந்த களவிஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைந்திருந்தனர்.

அந்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையால் 2026ஆம் ஆண்டிற்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மொத்தம் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியில், பாலம் மற்றும் அதனோடிணைந்த ஒருபகுதி வீதியைச் சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

62 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

66 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

85 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0