கோடாவுடன் இருவர் கைது.!
கஹவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலகமவத்த பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு வைக்கபட்டிருந்த கோடாவுடன் நேற்று வியாழக்கிழமை (25) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கஹவத்தை பகுதியயை சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவரும், பெண்ணொவரும் என தெரியவந்துள்ளது.
இதன்போது, அவர்களிடமிருந்து 1800 லீற்றர் கோடா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கஹவத்தை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.