உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

அகரவத்தை – லொனக் பிரதான பாதையை புனரமைக்குமாறு கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
30 பார்வைகள்

அகரவத்தை தொடக்கம் லொனக் வரை சுமார் 4 கிலோமீற்றர் நீளமுள்ள பிரதான பாதை தற்போது மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

இப்பாதையை நம்பி வாழும் சுமார் 750 குடும்பங்கள் தினந்தோறும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இப்பகுதியில் அமைந்துள்ள மமா/ஹட்/லொனக் தமிழ் வித்தியாலயத்தில் சுமார் 250 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். மேலும் 15 ஆசிரியர்கள் போக்குவரத்து சவால்களுக்கு மத்தியில் தங்களது கல்விச் சேவையை அர்ப்பணிப்புடன் வழங்கி வருகின்றனர்.

பாதையின் மோசமான நிலை காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பாகப் பயணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

அவசர மருத்துவ மற்றும் பிற சேவைகள் பாதிக்கப்படுவது, பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகள் தடைப்படுவது, இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பேருந்து சேவை இயங்காத நிலை போன்ற பல சிரமங்களை மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

மேலும், ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – கண்டி பிரதான A7 பாதையில் மண்சரிவு, பாதைச் சீர்கேடு, மர முறிவு அல்லது பிற அவசர நிலைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாற்றீட்டு பாதையாக பயன்படுத்தப்படும் முக்கியமான பாதை இதுவாகும். எனினும், தற்போது இந்த பாதையும் மோசமான நிலையில் காணப்படுவதால், அவசர காலங்களில் போக்குவரத்து நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.

இந்த பாதை உள்ளூர் மக்களுக்கு மட்டுமன்றி, அவசர காலங்களில் பிராந்திய போக்குவரத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், இதன் புனரமைப்பு காலத்தின் அவசியமாகும்.

சம்பந்தப்பட்ட அமைச்சுகள், சாலை அபிவிருத்தி அதிகாரசபை, உள்ளூராட்சி அமைப்புகள் மற்றும் பொறுப்புடைய அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி, அகரவத்தை – லொனக் பிரதான பாதையை விரைவாக புனரமைத்து போக்குவரத்து, கல்வி, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

84 0 0