செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; சர்வதேச ஒத்துழைப்பு பெறப்படும்.!
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தின் உண்மை எப்போது வெளிவரும் என்று மக்கள் எதிர்பார்த்துள்ளார்கள் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (25) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக எதனையும் மறைக்கவும் எவரையும் பாதுகாக்கவும் வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை.
செம்மணி விவகாரம் குறித்து சர்வதேச ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வோம்.
அத்தோடு, உண்மையை வெளிப்படுத்துவோம் என்று மேலும் தெரிவித்தார்.