உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

இவ்வாண்டு நடைபெற உள்ள பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் இல்லை!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
25 பார்வைகள்

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

எனவே முன்னர் அறிவிக்கப்பட்ட திகதிகளிலேயே பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று (24) பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து அவர், அங்கு மேலும் தெரிவிக்கையில்,

2025.09.14 ஆம் திகதி வௌியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், 2026 ஆம் ஆண்டிற்கான பரீட்சைகளுக்கான கால அட்டவணை நடைமுறைப்படுத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மாணவர்கள் அனைத்துப் பரீட்சைகளுக்கும் தோற்றுவதற்குத் தேவையான கற்றல் காலத்தை கருத்திற்கொண்டதன் பின்னரே இந்த கால அட்டவணை தயாரிக்கப்பட்டதாகவும் அவர் இதன்போது கூறினார்.

இதன்படி கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையானது ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி முதல் ஏப்ரல் 24 ஆம் திகதி வரையில் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்களை எதிர்வரும் ஜூலை மாதத்தில் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதேநேரம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையினை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

12 ஆம் தரத்திற்காக நடைபெறும் பொது தகவல் தொழிநுட்ப பாடத்திற்கான பரீட்சையானது ஒக்டோபர் 24 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் நேற்று முன்தினம் (22) முதல் எதிர்வரும் ஜூலை 16 ஆம் திகதி வரையில் கோரப்பட்டுள்ளன.

இதேவேளை கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை டிசம்பர் 8 ஆம் திகதி முதல் டிசம்பர் 17 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜூலை மாதத்தின் ஆரம்பத்தில் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0