உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தேர்தல்களின் போது அழியா மை பயன்படுத்துவதை தவிர்த்தால் சுமார் 100 மில்லியன் ரூபாய் அரச நிதியைச் சேமிக்க முடியும்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
29 பார்வைகள்

தேர்தல்களின் போது வாக்களித்ததை உறுதிப்படுத்துவதற்காக விரலில் மை பூசும் முறையை நீக்குவதன் மூலம், ஒரு தேர்தலின் போது சுமார் 100 மில்லியன் ரூபாய் அரச நிதியைச் சேமிக்க முடியும் என ‘பஃவ்ரல்’ (PAFFREL) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானம் அனைத்து வகையிலும் மிகச் சிறந்த ஒரு தீர்மானம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘பஃவ்ரல்’ அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இன்று (24) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த யோசனை திடீரென உருவானது அல்ல என்றும், பல ஆண்டுகளாக தேர்தல் துறை, அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கிடையில் கலந்துரையாடப்பட்ட விடயம் என்றும் அவர் தெரிவித்தார்.

குறித்த முறையை நீக்குவதன் மூலம் மை இறக்குமதி, விநியோகம் மற்றும் அதற்குத் தேவையான நிர்வாகச் செயற்பாடுகளுக்காகச் செலவிடப்படும் தொகை பெருமளவு குறைவதுடன், தேர்தல் செலவுகளைக் குறைப்பதன் மூலம் பொதுமக்களின் பணத்தைச் சேமிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

வாக்களிக்கும் போது அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், வாக்காளரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது கடுமையாக்கப்பட்டுள்ளது.

எனவே, மற்றுமொருவருக்குப் பதிலாக வாக்களிக்கும் சந்தர்ப்பங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன.

இதன்காரணமாக, அழியாத மையை விரலில் பூசும் தேவை முன்பு இருந்ததைப் போல கடுமையாக இல்லை என்ற கருத்து நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வாக்காளர் ஒருவர் வாக்களித்ததை உறுதிப்படுத்த விரலில் அழியாத மை பூசுவது பல தசாப்தங்களாக இலங்கையின் தேர்தல் செயன்முறையின் ஒரு அங்கமாக இருந்து வந்த போதிலும், வாக்காளர் இடாப்பு தயாரிப்பதில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், தற்போது கள்ள வாக்குகள் அளிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும் ரோஹண ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0