புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், பரீட்சையைத் திட்டமிட்டபடி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.மேலும், இந்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் 30 ஆம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் 30 ஆம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.