விபத்தில் சிக்கி பாதசாரி உயிரிழப்பு.!
புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தளம் – குருநாகல் வீதியில், புத்தளம் நகருக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருநாகல் நோக்கி பயணித்த லொறி ஒன்று, வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதியதில் படுகாயமடைந்த பாதசாரி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மீகஹதென்ன பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்துடன் விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதியும் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து தொடர்பாக புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.