உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ஆம் ஆண்டுக்கான மாணவர் ஆட்சேர்ப்பு ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
35 பார்வைகள்

இலங்கையின் திறன் மேம்பாட்டு துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் தொழிற்பயிற்சி அதிகார சபை (VTA), காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளது.

இதற்கமைய இளைஞர் யுவதிகளின் தொழிற்திறன்களை மேம்படுத்தி, வேலைவாய்ப்பிற்கும் சுயதொழிலுக்கும் வழிவகுக்கும் தரமான பயிற்சிகளை வழங்கும் நோக்கில் பல்வேறு தேசிய தொழில் தகைமை (NVQ) பாடநெறிகள் நடத்தப்படவுள்ளன.

அந்தவகையில் ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிபுணர் (Apparel Design Technician) கற்கை நெறிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NVQ Level 04 தரமுள்ள சான்றிதழ் உட்பட 01 வருட (முழு நேரம்) கால அளவு கொண்ட பாடநெறியாக நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் உற்பத்தி திறன்கள் அமைந்துள்ளது.

மேலும் மாதாந்தம் ரூ.7,500/- வரை பயிற்சி உதவித்தொகை தேசிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட NVQ சான்றிதழ் தொழில்துறை அனுபவமிக்க பயிற்றுவிப்பாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வழிகாட்டல் நவீன பயிற்சி வசதிகள் இதன் மூலம் மாணவர்கள் நன்மைகளை பெற்றுக் கொள்கின்றனர்.

மேலும், சமுர்த்தி மற்றும் அஸ்வெசும குடும்பங்களைச் சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு பாடநெறி கட்டணம் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.

தொழில்முறை எதிர்காலத்தை உருவாக்க விரும்பும் இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பாடநெறி 02 ஜூலை 2026 ஆரம்பமாக உள்ளதுடன் 30 ஜூன் 2026 விண்ணப்ப இறுதித் திகதியாகும்.

செய்முறை கற்றல் பகுதிகள்

  • Pattern Making (வடிவமைப்பு வரைதல்)
  • Embroidery (கை மற்றும் இயந்திர எம்பிராய்டரி)
  • Screen Printing
  • Dress Form Draping
  • Batik & Appliqué Work
  • Badge & Patch Design

மேலதிக தகவல்களுக்கு
VTA காரைதீவு தொழிற்பயிற்சி நிலைய
தொலைபேசி இலக்கம்: 0775824123 ,0771112538

‘திறனே வெற்றிக்கான பாதை – இன்று இணைந்து உங்கள் எதிர்காலத்தை உருவாக்குங்கள் என காரைதீவு தொழிற்பயிற்சி நிலையம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0