உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ராஜபக்ஷ குடும்பத்தைப் பழிவாங்குவதே திசைகாட்டி அரசின் ஒற்றை நோக்கம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
35 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசால், ராஜபக்ஷ குடும்பத்தினர் அனைவரும் திட்டமிட்ட முறையில் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதைய திசைகாட்டி அரசானது ராஜபக்ஷ குடும்பத்தினரைப் பழிவாங்கும் ஒற்றை நோக்கத்துடன்தான் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றது. ஒவ்வொரு நாளும் எம்மைக் குறிவைத்து ஏதாவதொரு வகையில் இந்தப் பழிவாங்கல் நடவடிக்கைகளை அரசு மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.

மாறாக, தற்போதைய கடுமையான பொருளாதாரச் சூழலில் சிக்கியுள்ள நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கோ அல்லது அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய நிவாரணங்களை வழங்குவதற்கோ அரசு எவ்வித முறையான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

அரசின் இத்தகைய பழிவாங்கல் அரசியல் போக்கு மற்றும் பொருளாதாரத் தோல்விகள் காரணமாக, தற்போதைய ஆட்சியின் மீது நாட்டு மக்கள் மிகக் குறுகிய காலத்துக்குள்ளேயே கடுமையான அதிருப்தியடைந்துள்ளனர்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0