உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சிஐடிக்கு எதிராக சுரேஷ் சலேயின் மனைவி முறைப்பாடு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
23 பார்வைகள்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலேயின் மனைவி மனோரி சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக குற்றங்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு தொடர்பான தேசிய அதிகார சபையில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார்.

இந்த முறைப்பாட்டை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித் சுரேஷ் சலேயின் மனைவி, தனது பிள்ளைகள் இருவரும் தந்தை சுரேஷ் சலேயைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்த போது, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரி எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த நபர் இதற்கு முன்னரும் பலமுறை தங்களைப் பின்தொடர்ந்து கண்காணித்ததாகக் குறிப்பிட்ட அவர், பிள்ளைகள் வாகனத்தில் ஏறும் போது அருகில் நின்று அவர்களை படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த நபரை தாம் பல முறை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அருகிலேயே அவதானித்துள்ளதாகவும், அதனால் அவர் அந்த திணைக்களத்தின் அதிகாரியாக இருக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.

“சுரேஷை (சிறைக்குள்) அடைத்து அவருக்குத் துன்புறுத்தல் தருவது போதாது என்று, தற்போது எனது பிள்ளைகளையும் குடும்பத்தினரையும் பின்தொடர்ந்து தொல்லை கொடுப்பது முற்றிலும் அநியாயமானது” என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் தனது கணவரான சுரேஷ் சலேயின் உயிருக்குக் கடும் ஆபத்து இருப்பதாகத் தான் அஞ்சுவதாகவும், முழு குடும்பத்தினருக்கும் முறையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக முன்னதாக மின்னஞ்சல் மூலமும் தற்பொழுது நேரில் சென்றும் அளித்த முறைப்பாட்டை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாகவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும் மனோரி சலே மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0