உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

நாட்டில் புதிதாக 10 இலட்சம் ஏழை மக்கள் உருவாக்கியுள்ளனர்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
26 பார்வைகள்

வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, கடந்த ஒன்றரை முதல் இரண்டு ஆண்டு காலப்பகுதிக்குள் நாட்டில் புதிதாக 10 இலட்சம் ஏழை மக்களை உருவாக்கியுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள குற்றம் சாட்டியுள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கான வற் வரியை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசு, தற்போது அதற்கு நேர்மாறாகச் செயற்பட்டு வருகின்றது.

துன்பங்கள் நிறைந்த இறுதிப் பௌர்ணமி தினம் என்று கூறி ஆட்சிக்கு வந்த இவர்களின் கீழ் 18 பௌர்ணமி தினங்கள் கடந்துவிட்ட போதிலும், நாட்டு மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை.

எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல், மாதமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக வியாபாரம் செய்யும் அனைத்து வர்த்தகர்களையும் வற் வரியில் பதிவு செய்ய அரசு தீர்மானித்துள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள சிறிய கடைகளுக்கும் இந்த வற் வரி விதிக்கப்படும் போது, அந்த வரியை வர்த்தகர்கள் கிராமத்து ஏழை மக்களிடமிருந்தே அறவிடுவார்கள். இது அரசின் அனுசரணையுடன் மக்களின் பைக்கற்றுக்களைப் பறிக்கும் ஒரு பகற்கொள்ளையாகும். மகா திறைசேரியில் ட்ரில்லியன் கணக்கில் பணம் இருப்பதாகக் கூறினாலும் ஏழைகளின் இறுதிச் சதமும் சுரண்டப்படுகின்றதே தவிர நிவாரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

நாட்டின் சுகாதாரத் துறை தற்போது முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. பல முக்கிய புற்றுநோய் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதுடன், மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான மருந்து வகைகள் இல்லை. தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகி வரும் சூழலில், அவர்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கூட இல்லை. ஜனாதிபதியால் அதிக நிதி ஒதுக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.

தகுதியற்றவர்களை உள்ளூராட்சி அமைப்புகளுக்கு நியமித்ததால் கழிவு மேலாண்மை சீர்குலைந்து, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் அரசு திணறி வருகின்றது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்துள்ள போதிலும் அரசு அதன் பலனை மக்களுக்கு வழங்காமல் ஏமாற்றி வருகின்றது. தற்போதைய நிலவரப்படி பெற்றோல் லீற்றர் ஒன்றிலிருந்து 125 ரூபாவையும், டீசல் லீற்றர் ஒன்றிலிருந்து 110 ரூபாவையும் குறைக்க முடியும். துறைமுகத்துக்குக் கொண்டு வரப்படும் விலைக்கே எரிபொருள் தருவோம் என்று தேர்தல் காலத்தில் கூறியவர்கள், இன்று மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கின்றார்கள். எதிர்வரும் மாத இறுதிக்குள் இந்த விலைக்குறைப்பு கட்டாயம் செய்யப்பட வேண்டும்.

அரசின் தோல்விகளையும் ஊழல்களையும் மூடிமறைப்பதற்காக அமைச்சர்கள் ஊடகவியலாளர்களையும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றார்கள். எரிபொருள் விலையைக் குறைக்குமாறு கேட்டபோது பிரதமர் அது “எண்ணெய் கடை அல்ல” எனக் பொறுப்பற்ற விதமாகப் பதிலளித்துள்ளார். தொழிற்சங்கத் தலைவர் ரஞ்சன் ஜயலால் தாக்கத் தயாராக இருப்பதாகக் கூறுகின்றார். பொறுப்பான அமைச்சர் ஒருவர் நாட்டின் விவசாயிகளைக் கசிப்பு வியாபாரிகள் என அவமதித்துள்ளார்.

அரசு முற்றாகத் தோல்வியடைந்துள்ள நிலையில், 1988, 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியைப் போல் மக்களை ஒடுக்கவும், பயமுறுத்தவும் முயற்சிக்கின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0