தேர்தல்களின் போது அழியாத மை பயன்படுத்துவதை நீக்க அமைச்சரவை அனுமதி.!
இலங்கையில் நடைபெறும் தேர்தல்களின் போது வாக்காளர்களின் விரல்களில் அழியாத மை பயன்படுத்துவதற்கான சட்டப்பூர்வ தேவையை நீக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.