உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தேயிலை மலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
37 பார்வைகள்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஹப்புகஸ்தனை தோட்டத்தில் உள்ள தேயிலை செடிகள் உள்ள பகுதியில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து அப் பகுதியில் பணிக்கு சென்ற தொழிலாளர்கள் தோட்ட அதிகாரிகளுக்கும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஷ்பகுமார ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

மஸ்கெலியா பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஸ்ப்பகுமார மற்றும் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டுட்ட போது மரணித்த நிலையில் காண படுபவர் ஹப்புகஸ்தனை தோட்டத்தைச் சேர்ந்த 43 வயது உடைய திருமணமான மூன்று குழந்தைகளின் தந்தையான ராமலிங்கம் விஜயகுமார் என அடையாளம் காணப்பட்ட நிலையில் மனைவி வெளிநாடுகளில் பணியாற்றி வருகிறார் என தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு ஹட்டன் நீதி மன்ற நீதிவான் வந்து பார்த்த பின்னர் ஹட்டன் தடைய வியல் பொலிசார் வந்து தடயங்களை சேகரித்த பின்னர் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் உடட் கூற்று பரிசோதனை செய்ய உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

64 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

83 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0