சைவ நெறியில் ‘A’ சித்தி பெற்ற முஸ்லிம் மாணவி!
2025 கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின்படி, ஹட்டன் கல்வி திணைக்களம் கோட்டம் மூன்றில் உள்ள மஸ்கெலியா புளூம்பீட் தேசிய கல்லூரி மாணவி முகமது ரமீஸ் பாத்திமா ரிஃப்னா அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று சிறந்த சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
இம்முடிவுகளில் ஒரு விசேட அம்சமாக, ஒரு முஸ்லிம் மாணவியான பாத்திமா ரிஃப்னா, இந்து சமயப் பாடமான சைவநெறி பாடத்தில் தோற்றி மிகச்சிறந்த ‘A’ சித்தியைப் பெற்று அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
மதங்களைக் கடந்து, சைவநெறிப் பாடத்தில் மிகச்சிறந்த சித்தியைப் பெற்று சாதனை படைத்துள்ள மாணவி பாத்திமா ரிஃப்னாவிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகினறனர்.