உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

டெங்குவைக் கட்டுப்படுத்த அவசர கலந்துரையாடல்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
34 பார்வைகள்

நாட்டில் வேகமாகப் பரவி வரும் டெங்கு அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் குறித்த அவசர கலந்துரையாடல், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, நாடளாவிய ரீதியில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பல தீர்மானங்கள் எட்டப்பட்டன.

அதன்படி, அவசர குறுகிய கால நடவடிக்கையாக அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மைப்படுத்தல் பணிகள் குறித்த விசேட சுற்றறிக்கைகளைத் துரிதமாக வெளியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், ஜூன் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாள்களுக்குள் நாட்டின் அதிக அபாயகரமான 600 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் விரிவான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் இங்கு முடிவெடுக்கப்பட்டது.

டெங்கு ஒழிப்புப் பணிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்காக முப்படைகளின் தலைமையில் விசேட கண்காணிப்புப் பிரிவு ஒன்றை நிறுவுவதற்கும், டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றாடலை வைத்திருப்போருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேலும் கடுமையானதாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், தற்போது பிரதேச மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள ‘சமூக சக்தி’ மற்றும் மக்கள் பாதுகாப்பு குழுக்கள் மூலம் கிராமிய மட்ட டெங்கு ஒழிப்பு பணிகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தற்போது நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி பாடசாலைகள், தொழிற்சாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் போன்றன டெங்கு நுளம்புகள் பெருமளவில் பெருகும் அதிஅபாய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், அந்த இடங்களை உடனடியாகத் துப்புரவு செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, வலுசக்தி அமைச்சின் செயலாளர் ரஸல் அபோன்சு, ‘Clean Sri Lanka’ செயலகத்தின் பிரதானி எஸ். பி. சி. சுகீஸ்வர ஆகியோருடன், பொது நிர்வாக அமைச்சு, கல்வி அமைச்சு, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு, தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் முப்படைகளின் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

64 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

83 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0