உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தீவிரமடையும் டெங்கு பரவல் – ஒரே நாளில் 1069 பேர் இனங்காணப்பட்டனர்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
25 பார்வைகள்

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் புதிதாக 1,069 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தற்காலிக பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பாகங்களிலும் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் பருவமழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 37 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேவேளை, டெங்கு காய்ச்சல் காரணமாக நாடு முழுவதும் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

மேல் மாகாணம் மற்றும் அதிக மழைவீழ்ச்சியைப் பெறும் மாவட்டங்களிலேயே கூடுதலான நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர் என்றும், வீடுகள் மற்றும் பொது இடங்களைச் சூழவுள்ள பகுதிகளில் நீர் தேங்கி டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களைத் துரிதமாக துப்புரவு செய்யுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

காய்ச்சல் அறிகுறி தென்படும் பட்சத்தில் சுய மருத்துவம் செய்துகொள்வதைத் தவிர்த்து, தகுதிவாய்ந்த வைத்தியர்களின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

64 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

83 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0