ஒலுமடுவில் தந்தை செல்வா நற்பணி மன்றத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒலுமடு பகுதியை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய மாணவர்களுக்கு வவுனியா தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (22.06.2026) இடம்பெற்றது.
பிரதேசசபை உறுப்பினர் செ.சுசீலன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஒலுமடு பகுதியை சேர்ந்த 20 மாணவர்களுக்கு சுமார் 50,000 ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் தலைவர் ந.கருணாநிதி, செயலாளர் மு.விஜயகாந்தன், பிரதேசசபை உறுப்பினர்களான த.தனுசன், கருணாநிதி, நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் பாலச்சந்திரன் சிந்துஜன், கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக் கிளை தலைவர் வை.பூபாலசிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.



