உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

அரசமைப்பு பொது வரைவைத் தயாரிக்க 33 பேர் கொண்ட வழிநடத்தல் குழு தெரிவு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
20 பார்வைகள்

தமிழ்த் தரப்பு சார்பில் பொதுவாக எவ்வாறானதொரு அரசியல் அமைப்பை முன்வைக்க வேண்டும் என்பது தொடர்பாக, பரந்துபட்ட மக்கள் கலந்துரையாடலை மேற்கொண்டு மக்களின் கருத்துக்களை உள்வாங்கிய ஒரு வரைவைத் தயாரிப்பதற்காக 33 நபர்களைக் கொண்ட ‘ஈழத் தமிழர் அரசியல் நிர்ணய சபையின் வழிநடத்தல் குழு’ தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர் அரசியல் நிர்ணய சபையின் பொதுச் சபையின் இரண்டாவது கூட்டமானது யாழ்ப்பாணம், நல்லூரில் உள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பெண்கள் அமைப்புகள் எனப் பல்வேறு தரப்புகளின் பிரதிநிதிகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சுமார் 3 மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

முக்கிய தீர்மானங்கள்

  • 33 பேர் கொண்ட வழிநடத்தல் குழு நேற்றைய கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 33 நபர்களைக் கொண்ட வழிநடத்தல் குழுவானது, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் வகையில் பொதுவான அரசியல் அமைப்பு வரைவு ஒன்றை மக்கள் கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் தயாரிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
  • புதிய அரசமைப்புக்கான நகல் தயாரிப்பு
    தற்போதைய புதிய அரசால் புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்கும் செயல்முறை ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், தமிழ் மக்கள் சார்பில் உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்பட வேண்டிய முன்மொழிவுகள் அடங்கிய நகலைத் தயாரிப்பதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டதுடன், அந்தக் குழு தனது பணிகளைத் தொடர வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
  • தமிழ் சட்டத்தரணிகள் பேரவைக்கு ஆதரவு
    தமிழ் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைப்பதற்காகத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை எடுத்து வரும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பது என்றும், அது சரியான பாதையில் பயணிக்கும் போது தேவையான முழு ஒத்துழைப்பை வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், ஈழத் தமிழர் அரசியல் நிர்ணய சபையின் செயற்பாடுகளில் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையும் தனது பங்களிப்பை நல்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உத்தியோகபூர்வ கடிதமொன்றை வரைவதற்கும் நேற்றைய பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

64 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

85 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0