உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

இலங்கையில் மனிதப் புதைகுழி ஆய்வுக்கு நிபுணத்துவம் போதியளவு இல்லை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
26 பார்வைகள்

“நாங்கள் ஓர் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். எமது நாட்டில் மனிதவியல் துறை, உளவியல் ஆலோசனை போன்றவற்றுக்குப் போதிய நிபுணத்துவம் இல்லை. மனிதப் புதைகுழியில் ஆய்வு செய்வதற்குரிய சரியான தொல்லியல் நிபுணர்கள் போதியளவில் இல்லை.” – என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நீதி அமைச்சர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிக்குமிடையிலான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி ர.சுரேந்திரகுமார் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம் இணைந்து செயற்பட்டு வருகின்றது என்றார்.

“தற்போது செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்ந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகள் மருத்துவ பீடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அடையாளம் காணும் நோக்கில் ஒரு மனிதவியல் ஆய்வகத்தையும், மரபணு (டி.என்.ஏ.) ஆய்வகத்தையும் உருவாக்க முயற்சி செய்து வருகின்றோம்.

எங்களுடைய முயற்சியின் மூலம் ஆய்வுகூடத்திற்குத் தேவையான சில இயந்திரங்களை பெற்றுள்ளோம். ஆனால் ஆய்வுகூடத்தை முழுமையாக அமைக்க இன்னும் கூடுதல் உதவி தேவைப்படுகின்றது.

எனவே, நீதி அமைச்சரும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமும் எங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும். ஏனெனில், போதுமான வசதிகள் இல்லாமல் இத்தனை தரவுகளைப் பராமரிப்பதும், பகுப்பாய்வு செய்வதும், சரியான முறையில் வகைப்படுத்துவதும், அடையாளம் காண்பதற்கான உதவிகளை வழங்குவதும் மிகவும் கடினமாக உள்ளன.” – என்றும் அவர் கூறினார்.

இதற்கு நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார பதிலளிக்கையில்,
“நாங்கள் ஓர் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். எமது நாட்டில் மனிதவியல் துறை, உளவியல் ஆலோசனை ஆகியவற்றில் போதிய நிபுணத்துவம் இல்லை. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகமும் இணைந்து மரபணு (டி.என்.ஏ.) பரிசோதனைகளை மேற்கொள்வதற்குரிய ஆய்வுகூடங்களை நிறுவுவதற்கும் அதனை மேம்படுத்துவதற்குரிய செயற்றிட்டங்களுக்கான முன்மொழிவுகளைச் செய்து வருகின்றோம்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திடமும் ஏதேனும் முன்மொழிவுகளை வைத்திருந்தால் அதனை நீங்கள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்திடம் கொடுக்கலாம். உங்களுடைய முன்மொழிவுகளுக்கு நிதி உதவிகள் வழங்குவதற்கு பல நன்கொடையாளர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் மூலம் உதவுவோம்.

மனிதப் புதைகுழியில் ஆய்வு செய்வதற்குரிய சரியான தொல்லியல் நிபுணர்கள் போதியளவில் இல்லை. எனவே நிபுணர்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டும். இங்கு இருக்கக்கூடிய பரிசோதனைக் கூடங்களையும் மேம்படுத்த வேண்டும். அரசாங்கப் பகுப்பாய்வு ஆய்வுகூடங்களினுடைய வளங்களை மேம்படுத்த வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை கட்டாயமாக எடுக்க வேண்டும். எதிர்காலத் திட்டமிடல்களின்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துடன் நாங்கள் இணைந்து மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கலாம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

64 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

85 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0