உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

யானை தாக்கி பாகனும், உதவியாளரும் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
30 பார்வைகள்

இரத்தினபுரி – இறக்குவானை ஸ்ரீ உபயதிலகாராம விகாரையின் 78 ஆவது பொசன் பெரஹராவிற்காக அழைத்துச் செல்லப்பட்ட யானையொன்று தாக்கியதில், அதன் பாகனும் அவரது உதவியாளரும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பெரஹராவிற்காக இரண்டு யானைகள் அழைத்து வரப்பட்டு விகாரைக்கு அருகில் கட்டப்பட்டிருந்தன.

இன்று (22) காலை இந்த யானைகளில் ஒன்றிற்கு தண்ணீர் புகட்டுவதற்காக பாகனின் உதவியாளர் யானையை இறக்குவானை ஆற்றை நோக்கி அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்போது, திடீரென ஆவேசமடைந்த யானை உதவியாளரைத் தாக்கி, மிதித்துக் கொன்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உதவியாளரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அவரை மீட்க அந்த இடத்திற்கு விரைந்த யானைப் பாகனையும் யானை கொடூரமாகத் தாக்கியுள்ளது. இதனால் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தின் பின்னர், யானை விகாரைக்கு அருகிலுள்ள வயல்வெளி ஒன்றிற்குள் சென்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.

யானைக்கு மயக்க மருந்து செலுத்தி அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0