மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு.!
தம்புத்தேகம – யாய 05 பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்துள்ளவர் யாய 05, இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.