உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மஹிந்த தரப்பினரை பாதுகாக்கும் நோக்கம் எனக்கு அறவே கிடையாது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
39 பார்வைகள்

பலரைச் சிறையில் அடைப்பதன் மூலம் மட்டும் ஒரு நாடு ஒருபோதும் முன்னேற்றம் அடைய முடியாது என்றும், அதற்குப் பதிலாக முறையான திட்டமிடப்பட்ட வேலைத்திட்டமே நாட்டுக்கு அவசியமானது என்றும் சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.

கம்பஹாவில் நேற்று முன்தினம் (20) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“தற்போதைய அரசானது நாட்டைக் கட்டியெழுப்பும் பிரதான வழியாக கைது நடவடிக்கைகள் மற்றும் சிறை தண்டனைகளை மட்டுமே கருதும் நிலை காணப்படுகின்றது. குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனினும், அதனை அரசியல் மேடைகளில் கூச்சலிட்டு முன்னிறுத்துவதன் மூலம் நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

நாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையின் போதும், அதனால் நாட்டுக்கும், குறிப்பாக இளைய தலைமுறைக்கும் கிடைக்கும் பயன் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டும். நான் இங்கு எந்தவொரு தனிப்பட்ட அரசியல் நபரையும் பாதுகாக்கும் நோக்கில் இந்தக் கருத்துகளை முன்வைக்கவில்லை. நாட்டின் எதிர்கால வளர்ச்சியை மையமாகக் கொண்டே எனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றேன்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அல்லது அவருடன் இருந்த அரசியல் தரப்பினர் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து நான் பேசுவது அவர்களைப் பாதுகாப்பதற்காக அல்ல. மாறாக, இவ்வாறான பழிவாங்கல் நடவடிக்கைகள் மூலம் நாட்டை திசைதிருப்பும் தற்போதைய அரசியல் அணுகுமுறைகள் சரியானதல்ல என்பதே எனது உறுதியான நிலைப்பாடு.

எனவே, நாட்டை முன்னேற்றுவதற்கு வெறுமனே கைது நடவடிக்கைகள் மட்டும் போதாது. பொருளாதார, சமூக மற்றும் அரசியல் துறைகளில் தெளிவான, திட்டமிட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே நாட்டின் உண்மையான முன்னேற்றத்துக்கு அடிப்படையாகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0