உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு துரோகம் இழைத்து, ஒற்றையாட்சிக்குள் முடங்குகிறது தமிழரசு கட்சி!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
40 பார்வைகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சி தற்போதைய சூழலில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு மாறாக, ஒற்றையாட்சி முறைமைக்குள் (ஏக்கிய ராச்சிய) முடங்கி வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் வழக்கறிஞர் கே. சுகாஸ் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் பின்வருமாறு:

வரலாற்றுச் சிறப்புமிக்க 50ஆவது ஆண்டு
“இந்த ஆண்டு (2026) தமிழ் மக்களின் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறப்புமிக்க ஆண்டாகும். ஏனெனில், வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானம் எனப்படும் ‘தமிழீழப் பிரகடனம்’ நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

ஆனால், இந்த 50ஆவது ஆண்டை தமிழ் மக்கள் நினைவுகூர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், அந்த வரலாற்றுப் பிரகடனத்தை முன்னின்று வழிநடத்திய தந்தை செல்வாவின் இலங்கைத் தமிழரசுக் கட்சி, இன்று அதற்கு முற்றிலும் மாறான ஒரு அரசியல் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.”

ஒற்றையாட்சி வரைவுக்கு முட்டுக்கொடுக்கும் தமிழரசு
“தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் கொண்டுவந்து நிறைவேற்றத் தயாராகிவரும் ஒற்றையாட்சி (ஏக்கிய ராச்சிய) அரசியலமைப்பு வரைபை உருவாக்குவதில், தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் முதன்மைப் பங்களிப்பை வழங்கியுள்ளார்.

அவரால் எழுதப்பட்ட, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட இந்த ‘ஏக்கிய ராச்சிய’ வரைபைத் தமிழர்களின் அரசியல் தீர்வாக அவர்கள் தலையில் திணிப்பதற்கு தமிழரசுக் கட்சி மிகத் தீவிரமாக முனைப்புக்காட்டி வருகின்றது. இத்தகைய செயல்பாடானது, 1976ஆம் ஆண்டு தமிழ் மக்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு முற்றிலும் எதிரான செயலாகும்.”

தந்தை செல்வாவிற்கு இழைக்கப்படும் அரசியல் துரோகம்

“வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை பிரகடனப்படுத்திய தந்தை செல்வா வழிவந்த தமிழரசுக் கட்சி, இன்று ஒற்றையாட்சிக்கும் ஏக்கிய ராச்சிய வரைவுக்கும் முட்டுக்கொடுத்து அதற்குள் முடங்கிக் கிடப்பது, வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கும் அதனைத் தலைமை தாங்கி நடத்திய தந்தை செல்வாவிற்கும் இழைக்கப்படும் அப்பட்டமான அரசியல் துரோகமாகும்.”என்று ததேமமு ஊடகப்பேச்சாளர் சுகாஸ் தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0