உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கான புதிய வரி ஏற்றுமதித் துறையை கடுமையாக பாதிக்கும்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
38 பார்வைகள்

தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ள புதிய வரி, இலங்கையின் தேங்காய் ஏற்றுமதித் துறைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எச்சரித்துள்ளார்.

இதனால், மதிப்புக்கூட்டப்பட்ட ஏற்றுமதிக்காக பயன்படுத்தப்படும் உள்ளூர் தேங்காய்கள் உள்நாட்டு எண்ணெய் உற்பத்திக்குத் திருப்பப்படலாம் என்றும், அதன் விளைவாக பண்ணை விலைகள் குறையவும், ஏற்றுமதி ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வரி காரணமாக இறக்குமதி செலவு கிலோ கிராமொன்றுக்கு 1,250 ரூபா முதல் 1,400 ரூபா வரை உயரக்கூடும் என அவர் தனது ‘X’ தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி முழுமையாக தடைப்பட்டால் அரசாங்கத்திற்கு எதிர்பார்க்கப்படும் வரி வருவாய் கிடைக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வரி 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டுகளில் ஏற்றுமதி வருவாயையும் அரசாங்க வருவாயையும் குறைத்து, தொழில்துறையை கடுமையான அழுத்தத்திற்குள் தள்ளக்கூடும் என ஹர்ஷ டி சில்வா எச்சரித்துள்ளார்.

இந்த வரிக் கொள்கையின் தாக்கங்களை அரசாங்கம் கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தவறான வரிக் கொள்கை தொழில்துறையை மட்டுமின்றி, அதனைச் சார்ந்துள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களையும் பாதிக்கும்,” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0