உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன பிரஜை கைது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
39 பார்வைகள்

சுமார் ஒரு கோடியே 32 இலட்சம் ரூபாய் (13.2 மில்லியன்) பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடத்தி வர முயன்ற வெளிநாட்டு பயணி ஒருவர், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (21) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சுங்கப் பிரகடனம் செய்வதற்கு ஏதுமில்லாத பயணிகளுக்கான ‘பசுமை பாதை’ ஊடாக இந்த சிகரெட் தொகையை கடத்திச் செல்ல முயன்ற போதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் சீன நாட்டைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் சீனாவில் இருந்து தாய்லாந்தின் பெங்காக் நகருக்கு வந்து, அங்கிருந்து தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அங்கு சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, அவர் கொண்டு வந்த பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீன தயாரிப்பு சிகரெட்டுகள் 88,000 அடங்கிய 440 சிகரெட் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சீன நாட்டவரை சுங்க அதிகாரிகள் தங்கள் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0