உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பசிலுக்கு எதிரான பிடியாணையை மீளப் பெற முடியாது! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
37 பார்வைகள்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை மாத்தறை பிரதம நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க நிராகரித்துள்ளார்.

மாத்தறை எளியகந்த வீதி, பிரவுன்ஸ்ஹில் பகுதியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணியை கொள்வனவு செய்தமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக காவல்துறை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், கடந்த மே மாதம் 22 ஆம் திகதி பசில் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த தினத்தில் பசில் ராஜபக்ஷ சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா, முன்னாள் அமைச்சர் உடல்நலக் குறைவு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதால் அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பித்துத் தெரிவித்தார்.

இதனடிப்படையில், சந்தேகநபரின் ஆரோக்கிய நிலையைக் கருத்திற்கொண்டு பிடியாணையை மீளப் பெறுமாறு கோரி சட்டத்தரணிகளால் இன்றைய தினம் நகர்த்தல் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டது.

எனினும், பசில் ராஜபக்ஷ தொடர்ச்சியாக நீதிமன்றத்தைப் புறக்கணித்து வருவதாகவும், சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் அவ்வாறு பிடியாணையை மீளப் பெற முடியாது என்றும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த மாத்தறை பிரதம நீதவான், பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை அவ்வாறே நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

23 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0