உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

நீதி இல்லாத நாட்டிற்கு நீதி அமைச்சர் எதற்கு? – செம்மணியில் போராட்டம்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
39 பார்வைகள்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வருகை தரவுள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று ஏ – 9 பிரதான வீதியில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பிரதானிகள் ஆகியோர், செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதிக்கு இன்று மாலை நேரில் வருகை தந்தார்.

அமைச்சரின் இந்த வருகையை முன்னிட்டு, இன்று பிற்பகல் 2 மணி முதல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சித்துப்பாத்தி இந்து மயானத்தின் முன்றலில், ஏ – 9 வீதியை மறித்துத் தமது கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பித் தமது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.

“நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு?”, “செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகளுக்குச் சர்வதேச மேற்பார்வை வேண்டும்”, “உள்ளகப் பொறிமுறைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை” மற்றும் “சர்வதேச விசாரணையே இறுதித் தீர்வு” உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதி அமைச்சரின் வருகை மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் விசாரணைகள் வெறும் கண் துடைப்பு நடவடிக்கை என்று சுட்டிக்காட்டியுள்ள போராட்டக்காரர்கள், தமக்கு உள்நாட்டுப் பொறிமுறைகளில் துளியும் நம்பிக்கையில்லை என்றும், சர்வதேச சமூகத்தின் நேரடித் தலையீடும் விசாரணையுமே தமக்கான நீதியைப் பெற்றுத் தரும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

23 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0